திருக்கடையூரில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணி..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பொது சுகாதாரத்துறை மூலம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என கூடுதல் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருக்கடையூர் ஊராட்சியில் சன்னதி வீதி பகுதியில் சாலையில் இரு புறங்களில் உள்ள குப்பைகளை தூய்மை பணியாளர்கள், மற்றும் ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். மேலும் தூய்மை காவலர்கள் பணியின்போது முழு பாதுகாப்பு உபகரணதுடன் பணியாற்ற வேண்டும், சுத்தம் செய்த இடத்தில் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும் என்று தூய்மை காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், ஊராட்சி செயலர் வெங்கடேசன், ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் உடன் இருந்தனர் முழுவதுமாக குப்பைகள் அகற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.
No comments