Breaking News

முதல்வர் துவக்கி வைக்கும் புதுமைப்பெண் விரிவாக்கத்திட்டம்: அரசு உதவிபெறும் பள்ளி மாணவியர் 75 ஆயிரம் பேர் பயனடைவர்! அமைச்சர் கீதாஜீவன்.

 


தூத்துக்குடியில் நாளை (டிச.30) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ள புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தின் மூலம் இந்த கல்வி ஆண்டில் உயர்கல்வி சென்றுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 75 ஆயிரம் மாணவியர் பயனடைய உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பெண்கள் அனைவரும் உயர்கல்வியை படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதலில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து கல்லூரி செல்லும் மாணவியருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்மூலம் சுமார் 4 லட்சம் மாணவியர் பயனடைந்து வருகின்றனர். பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்களின் கோரிக்கை விடுத்ததன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கும், இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பலரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து கடந்த சட்டமன்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவியருக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார். அதன்படி இத்திட்டத்தை தூத்துக்குடியில் நாளை (திங்கள்கிழமை) நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்நிலையில் இந்த விழா நடைபெறும் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்: பெண்கள் எல்லாம் உயர்கல்வியை படிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட திட்டம்தான் புதுமைப்பெண் திட்டம். இத்திட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து கல்லூரி செல்லும் மாணவியருக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டம் அனைத்து கல்லூரிகளில் படிக்கும் மாணவியருக்கும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கொண்டு வந்தபிறகு கடந்த 4 ஆண்டுகளாககூட உயர்கல்வி பயிலாமல் இருந்த 13 ஆயிரம் மாணவியர் புதிதாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், இத்திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கும் விரிவுபடுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்ததன் விளைவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உதவி பெறும் பள்ளி மாணவியருக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை தூத்துக்குடியில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இந்த விரிவாக்க திட்டத்தின் மூலம் இந்த கல்வி ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று உயர்கல்விக்கு சென்றுள்ள 75,028 மாணவியர் பயனடைகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 4680 மாணவியர் பயனடையவுள்ளனர் என்றார்.

அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலத்துறை ஆணையர் லில்லி, இணை இயக்குநர் நந்திதா, கலெக்டர் இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் காயத்ரி, குழந்தை திட்ட வளர்ச்சி அலுவலர் ரூபி, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பாலகுருசுவாமி, நிர்மல்ராஜ், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், பகுதிசெயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், சிவன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் மற்றும் கருணா, மணி, அல்பர்ட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன், உதவி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். 


செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.

No comments

Copying is disabled on this page!