காசநோய் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
மத்திய அரசு மூலம், இந்தியாவில் உள்ள 347 மாவட்டங்களில், 100 நாட்கள் காசநோய் விழிப்புணர்வு பிரசாரம் நடத்த திட்டமிட்டுள்ளது. அதில், புதுச்சேரி பகுதியும் ஒன்றாகும். காசநோயை கண்டறிவது, புதிய நோயை உருவாவதை தடுப்பது அதன் நோக்கம்.
அதனை அடுத்து, கோரிமேடு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று முன்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
சுகாதாரத்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, கலெக்டர் குலோத்துங்கன், சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள், திட்ட இயக்குனர் கோவிந்தராஜன், டாக்டர்கள் வெங்கடேஷ், சித்ரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments