அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் 'நிவாரணம்' முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு..
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ரங்கசாமி,
புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைக்கும் ரூ.5 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள், படகுகளுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது. சேதம் அடைந்த படகு ஒன்றுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்கப்படும்
மழையால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த கூரை வீடு ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும். மாடு உயிரிழப்புக்கு ரூ.40 ஆயிரம் மற்றும் கன்றுக் குட்டிக்கு ரூ.20 ஆயிரம் ஆகியவை வழங்கப்படும்’ என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
No comments