புதுச்சேரி கடலூர் சாலையில் 70 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியினை முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்..
புதுச்சேரியில் இருந்து முதலியார்பேட்டை வழியாக கடலூர் செல்லும் பிரதான சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாகவே காணப்படும்.
மேலும் கடலூர் சாலை நடுவே உள்ள ரயில்வே கேட் தினமும் குறைந்தது ஏழு முறை மூடி திறப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதுச்சேரி கடலூர் சாலையில் 70 கோடி ரூபாய் செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிகோல் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி பூஜை செய்து மேம்பாலம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
முதலியார் பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments