Breaking News

பத்திரப்பதிவு துறையில் பத்திர பதிவிற்கான கட்டணம் இணைய வாயிலாக செலுத்தும் சேவையை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

 


புதுச்சேரி அரசு பதிவுத்துறையில் பத்திரப் பதிவிற்கான கட்டணம் இணைய வாயிலாக செலுத்தும் சேவையை பாரத ஸ்டேட் வாங்கி புதுச்சேரி கிளை உடன் இணைந்து தொடங்கப்படவுள்ளது. இதன்மூலம் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் பணப்பரிவர்த்தனை அற்ற அலுவலகங்களாக மாற்றப்படவுள்ளது.


 மேலும் பத்திரப்பதிவு செய்ய வரும் மக்கள் தங்கள் பதிவு கட்டணத்தை பல்வேறு செய்திகளின் சேவைகள் மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இதனை பத்திரப்பதிவிற்கு இணையத்தளத்தில் முன்பதிவு செய்யும்பொழுதே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.


இந்த இணையதள சேவையினை முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று தொடங்கி வைத்தார்.


அமைச்சர்  க. லட்சுமி நாராயணன், வருவாய்த் துறை செயலர் ஆஷிஷ் மாதோராவ் மோரே, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்., செந்தில் குமார், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி முதன்மை கிளை உதவி பொது மேலாளர் அன்புமலர் ஆகியோர் இந்நிகழ்ச்சியின்போது உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!