இளநிலை எழுத்தர் பதவிக்கான இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்த 19 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக இள நிலைஎழுத்தர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 157 பேர்களில், இதுவரை 151 நபர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இவர்களில் 131 நபர்கள் பணியில் சேர்ந்து உள்ளனர். மீதமுள்ள காலிப்பணியிடங்களுக்கு, காத்திருப்போர் பட்டியலிலிருந்து 19 நபர்களுக்கு பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் வழங்கினார்.
அப்போது,சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை சார்புச் செயலர் ஜெய்சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments