புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுகரசுக்கு பாரதி பொற்பதக்கம் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கினார்.
புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில் திமுக முன்னாள் எம்.பி., சி.பி. திருநாவுகரசுக்கு பாரதி பொற்பதக்கம் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கினார்.
புதுவை தமிழ்ச்சங்கம் சார்பில், திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சி.பி. திருநாவுக்கரசு அவர்களுக்கு பாரதி பொற்பதக்கம் விருதை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா முன்னிலையில் முதல்வர் ந. ரங்கசாமி வழங்கி சிறப்பித்தார்.
புதுவை தமிழ்ச்சங்கத்தில் மகாகவி பாரதி விழா மற்றும் பாரதி பொற்பதக்கம் வழங்கும் விழா தமிழ்ச்சங்கத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தமிழ்ச்சங்க தலைவர் கலைமாமணி முனைவர் வி. முத்து தலைமை வகித்தார். செயலாளர் சீனு. மோகன்தாசு வரவேற்று பேசினார்.
துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணைச் செயலர் தினகரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தமிழ்மாமணி புலவர் உசேன், கலைமாமணி எம்.எஸ். ராஜா, பொறிஞர் மு. சுரேசுகுமார், பாவலர் அ. சிவேந்திரன், பாவலர் ர. ஆனந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் கோவிந்தராசு தலைமையில் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்ற தலைப்பில் பாவரங்கம் நடைபெற்றது.
விழாவில், புதுச்சேரி முதல்வர் ந. ரங்கசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் சி.பி. திருநாவுக்கரசு ஒரு சவரன் எடையுள்ள பாரதி பொற்பதக்கத்தை வழங்கி வாழ்த்தி பேசினார். புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா பாராட்டுரை வழங்கினார்.
பாரதி பொற்பதக்கம் பெற்றுள்ள வழக்கறிஞர் சி.பி. திருநாவுக்கரசு தி.மு.கழகம் சார்பில், 2022–ஆம் ஆண்டு நடைபெற்ற கழக முப்பெரும் விழாவில், பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, திமுக பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் மு. வைத்தியநாதன், எம்.எல்.ஏ., திமுக மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.உருளையன்பேட்டை தொகுதி பொருளாளர் சசிகுமார் மற்றும் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், தமிழறிஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments