நாட்டிலேயே அதிக சதவீத பெண் வாக்காளர்கள் கொண்ட மாநிலமாக புதுச்சேரி உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
2024ம் ஆண்டு மக்களவை தேர்தல்களுக்கான 42 புள்ளி விவர அறிக்கைகளின் விரிவான தரவு தொகுப்புகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் நாட்டிலேயே அதிக பெண் வாக்காளர்களின் ஓட்டு 53.03சதவீத பதிவாகி, மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மிஞ்சியுள்ளனர். மக்களவை தேர்தலில், புதுச்சேரியின் மாகே சட்டமன்ற தொகுதியில் உள்ள 31 வாக்குச்சாவடிகளிலும் பெண் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிந்துள்ளனர். பாலின விகிதம் 2023ம் ஆண்டு 1127ல் இருந்து 2024ம் ஆண்டு 1130 ஆக அதிகரித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 2024ல் 5,42,979 ஆக இருந்த பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2019ல் 5,13,799 ஆக இருந்தது. இது 5.67% அதிகரித்துள்ளது. 2024ம் ஆண்டு நாட்டிலேயே அதிக சதவீத பெண் வாக்காளர்களைக் கொண்ட மாநிலமாக புதுச்சேரி உள்ளது. 2019ல் 96 ஆக இருந்த மூன்றாம் பாலின வாக்காளர்கள் எண்ணிக்கை, 2024ல் 151 பேர் பதிவு செய்துள்ளனர். இதில் 105 பேர் வாக்களித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments