கிளியூர் மற்றும் எம் குன்னத்தூர் கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளியூர் மற்றும் எம்.குன்னத்தூர் கிராமத்தில் அலமேலு மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலின் கார்த்திகை பஞ்சமி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக அலமேலு மங்கை உடன் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு புஷ்ப அலங்காரத்துடன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது இன்று சக்கரத்தாழ்வாருக்கு பால் தயிர் இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு பின்பு கோவிலில் இருந்து பஜனைகள் பாடியபடி அருகே உள்ள அய்யனார் தெப்ப குளத்திற்கு வந்தடைந்தனர்.
பின்பு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற சரண கோஷங்களுடன் சக்கரத்தாழ்வார் குளத்தில் இறங்கி புனித நீராடினர் அவருடன் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர் இந்த நிகழ்வில் கிளியூர், குன்னத்தூர் ரகுநாதபுரம் நத்தாமூர், தாம்பல் எதல வாடி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
தொடர்ந்து பக்தர்கள் எடைக்கு எடை பணம் செலுத்தி துலாபாரம் செய்தனர் மேலும் சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்களுக்கு காலை முதலே அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments