உளுந்தூர்பேட்டை அருகே முன்னாள் சென்ற மூன்று சக்கர ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதி சேர்ந்த சலாவுதீன் பழங்கள் வியாபாரம் செய்து வரும் இவர்செஞ்சியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு மூன்று சக்கர ஆட்டோவில் பழங்களைகொண்டு வந்தனர் அப்பொழுது இந்த மூன்று சக்கர ஆட்டோவானது கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சி அருகே சென்ற போது பின்னால் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்த கார் மோதியதில் மூன்று சக்கர ஆட்டோ தலைக்குப்புற கவுந்து விபத்துக்குள்ளானது இதில் ஆட்டோ ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தினால் மூன்று சக்கர ஆட்டோ சாலையின் கவிழ்ந்ததால் பழங்கள் கொட்டி சிதறி கிடந்தன இந்த விபத்தின் காரணமாக சென்னை திருச்சி ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து சுமார் அரை மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் விபத்தில் சிக்கிய வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்திய பின்னர் போக்குவரத்து சரி செய்தனர் தொடர்ந்து விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments