கமாக் மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு, விற்பனைத் திருவிழா!
தூத்துக்குடி கமாக் மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி கமாக் மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உணவு மற்றும் விற்பனைத் திருவிழா நடைபெற்றது. விழாவினை கமாக் அறக்கட்டளையின் தலைவர் வனஜா ராஜகோபாலன், பள்ளி மேலாண்மை இயக்குநர் கௌரி மதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், பள்ளி செயலர் சிந்துஜா பொன்ஸ்ரீ தலைமை வகித்தார். விழாவில், பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் சார்பில் உணவுத்திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சி நடைபெற்றது.
இதில், விளையாட்டு பொருட்கள், ஆரோக்கியம் நிறைந்த பாரம்பரிய உணவுப் பொருட்கள், அதிஷ்டக்குழுக்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன. உணவுத்திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சி மூலம் கிடைக்கும் வருமானத்தில் முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகள் காப்பகத்திற்கு உதவிகள் வழங்கப்பட்டது. மேலும், இத்திருவிழாவில் மாணவர்கள் தங்களது பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தினர். இதுபோன்ற நிகழ்வுகள் பள்ளியில் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை சபாட்டினி லாம்பர்ட், உதவி தலைமை ஆசிரியை கத்தரின் டிரிஃபிலா மிசியர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments