சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டரின் பேட்டரியை இளைஞர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகு இவர் உளுந்தூர்பேட்டை சேலம் சாலையில் உள்ள எம்.எஸ்.தக்கா பகுதியில் ஜல்லி எம்சேன்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்து வருகிறார் அங்கு ரகு தனக்கு சொந்தமான டிராக்டர் ஒன்றை கடந்த 9-ம் தேதி நிறுத்தி வைத்துவிட்டு 13ஆம் தேதி வந்து பார்த்தபோது டிராக்டரில் இருந்த பேட்டரியை காணவில்லை இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த பொழுது கடந்த 12ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் டிராக்டர் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பின்னர் அந்தப் பகுதியில் சுற்றி வந்து ஆள் நடமாட்டம் இல்லாததை நோட்டமிட்ட அந்த இளைஞர் டிராக்டரில் இருந்த பேட்டரியை கழற்றி இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் ரகு இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
No comments