கருங்கல் ஜல்லி சாலைகள் அமைத்தல் மற்றும் வடிகால் வாய்க்காலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை..
திருபுவனை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருபுவனை கிராமத்தில், திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் திருபுவனை கிராமத்தில் உள்ள திருமுருகன் நகர், பாலாஜி நகர் மற்றும் வரதராசு நகர் உள்ளிட்ட பகுதிகளில் உட்புற தெருக்களுக்கு கருங்கல் ஜல்லி சாலைகள் அமைத்தல் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதே போல் திருபுவனை கிராமத்தில் உள்ள பனந்தோப்பு பகுதி உட்புற தெருக்களுக்கு சாலையை மேம்படுத்துதல் மற்றும் பக்க வடிகால் வாய்க்காலை மேம்படுத்துதல் பணிக்கான பூமி பூஜை ரூபாய் 26 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் பாஸ்கர், ஊர் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments