மாகேவில் முதல் முறையாக நடைப்பெற்ற மக்கள் குறை கேட்பு முகாமினை, சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் தொடங்கி வைத்தார்..
புதுச்சேரி ஒன்றிய பிரதேச 4 மாவட்டங்களில் மாகே பகுதியும் ஒன்று.கேரள மாநிலம் கோழிக்காடு அருகே அமைந்துள்ளது அமைந்துள்ளது. இதன் சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் பரம்பத் உள்ளார்.
மாகே தொகுதியில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த புதுவை அரசு அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் பரம்பத் தீவிர முயற்சியின் காரணமாக முதல் முறையாக மக்கள் குறை தீர்வு முகாம் பள்ளூரில் உள்ள ஏவிஎஸ் சில்வர் ஜீப்ளி ஹாலில் நேற்று நடைபெற்றது.
மாகே மண்டல நிர்வாகி மோகன் குமார், நகராட்சி ஆணையர் சதர்சிங் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற மக்கள் குறை தேர்வு முகாமினை ரமேஷ் பரம்பத் எம்எல்ஏ தொடங்கி வைத்து, அதிகாரிகளுடன் இணைந்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதல்முறையாக நடந்த இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாகே பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும், அரசு அலுவலகங்களில் ஏற்படும் தொழில்நுட்ப தாமதங்களை தவிர்க்க வேண்டும், முக்கிய இடங்களில் ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் உட்பட பல்வேறு குறைகளை மக்கள் தெரிவித்தனர்.
இதனை கேட்டறிந்த எம்எல்ஏ ரமேஷ் பரம்பத், விரைந்து குறைகளை சரி செய்யுமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.மேலும் மாகேவின் பிற பகுதிகளிலும் மக்கள் குறை தீர்வு முகாம் நடத்தப்படும் என உறுதி அளித்துள்ளார்.
No comments