புதுவை பேரவைத் தலைவா் செல்வத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி மற்றொரு சுயேச்சை எம்எல்ஏ அங்காளன் மனு..
புதுவை சட்டப்பேரவைத் தலைவா் செல்வத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வரக் கோரி சுயேச்சை எம்எல்ஏ நேரு நேற்று முன்தினம் பேரவைச் செயலரிடம் மனு அளித்தாா்.
இந்த நிலையில், பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ அங்காளனும், பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கோரி பேரவைச் செயலரிடம் மனு அளித்துள்ளாா்.
அவர் அளித்துள்ள கடிதத்தில்,புதுவை சட்டப்பேரவைத் தலைவா் தனது பதவிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறாா்.சட்டப்பேரவையில் உறுதிமொழி குழுத் தலைவரின் பதவியை நீக்கியதன் மூலம் அவா் பாரபட்சமாக செயல்பட்டது உறுதியானது.
தற்போதைய பேரவைத் தலைவரின் நிலைப்பாடு அரசமைப்பு மீறல்களால் நிரம்பி உள்ளது.எனவே, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments