மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம்..
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது.
பாலின அடிப்படையிலான வன்முறை உலகின் மிகவும் பரவலான மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும்.இது ஒவ்வொரு நாட்டிலும் , சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் நிகழ்கிறது.ஒரு சமூகத்திற்குள் வேரூன்றியிருக்கும் ஆண்,பெண் சக்தி ஏற்றதாழ்வுகள் காரணமாக ஒவ்வொரு நபருக்கும் அச்சுறுத்தலை பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்படுத்துகிறது.
குழந்தை திருமணம்,பாலியல் கடத்தல் மற்றும் பெண் கொலைகள் அனைத்து பாலின அடிப்படையிலான வன்முறையின் வடிவங்களாக உள்ளது.பாலின அடிப்படையிலான வன்முறை ஆண்கள் மற்றும் சிறுவர்கள் மீது செலுத்தப்பட்டாலும், மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்வது பெண்களும், சிறுமிகளும் தான்.
பாலின சமத்துவமின்மை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை நிவர்த்தி செய்வதற்கான விழிப்புணர்வு பயிற்சிகள் பொதுமக்களின் பார்வையில் பிரச்சனையின் முக்கியத்துவத்தை உயர்த்த உதவும்.பாலின அடிப்படையிலான வன்முறையை அடையாளம் காணவும்,உரையாற்றவும் மற்றும் பதிலளிக்கவும் வல்லுநர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆசிரியர்கள்,இளைஞர்கள்,சமூக சேவையாளர்கள்,காவல் துறையினர் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு அலுவலர்கள் போன்றவர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் பாலின அடிப்படையிலான வன்முறையை முற்றிலும் நீக்குவதற்கான முயற்சிதான் இந்த விழிப்புணர்வு பயிற்சி கருத்தரங்கு. இக்கருத்தரங்களை நல்ல முறையில் தலைமையாசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரேகா, மாவட்ட நன்னடத்தை அலுவலர் தங்க புஷ்பராஜா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பரமசிவம், முத்துக்கணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments