ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..
புதுச்சேரியில் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி.இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ நாரா. கலைநாதன் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கௌரவப்படுத்தி நினைவு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.
தொடர்ந்து, மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் முன்னாள் மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் 1977 ஆம் ஆண்டு முதல் படித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜீவானந்தம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ஜெகஜோதி உட்பட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments