மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் திருக்கடையூர் ஊராட்சி பகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 60க்கும் மேற்பட்டோர் தாங்கள் இருந்த கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர் தரங்கம்பாடி தாலுக்கா ஆயப்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் தலைமையிலும் அதிமுக ஒன்றிய செயலாளர் வி ஜி கண்ணன் முன்னிலையிலும் அதிமுகவில் இணைந்தனர் நிகழ்ச்சியை இளைஞர் பாசறை ஒன்றிய செயலாளர் பிரபு ஏற்பாடு செய்திருந்தார் இதில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எம் கே எஸ் குமார் எம்ஜிஆர் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் துரைராஜன் திருக்கடையூர் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் சங்கர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசி ரேகா ரமேஷ் மகளிர் அணி செயலாளர் புனித வள்ளி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் அதிமுகவில் இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
No comments