குடியாத்தத்தில் கங்காதரசாமி நடுநிலைப்பள்ளி தரம் உயர்த்த கோரி காமராஜர் சிலை அருகே அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
குடியாத்தத்தில் கங்காதரசாமி நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் பங்களிப்பாக 2015 ம் ஆண்டு ரூ. 1 லட்சம் அரசுக்கு நிதி செலுத்தி உள்ளனர் இருப்பினும் இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை இந்நிலையில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி அனைத்து கட்சியினர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பலமனேரி சாலை காமராஜர் சிலை அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கல்விக் குழு முன்னாள் துணைத் தலைவர் கோ. ஜெயவேலு புதிய நீதி கட்சி நகர செயலாளர் ராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியின் சார்பாக தியாகராஜன் பாமக கட்சியினை சேர்ந்த குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் வி. பழனி தினகரன் பாமக நகர செயலாளர் எஸ். குமார் ஒன்றிய செயலாளர் அரவிந்த் அ. ம. மு. க. நகரச் செயலாளர் சங்கர் கம்யூனிஸ்ட் கட்சி குபேந்திரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments