கனக நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர் ஆபத்தை உணராமல் தடுப்பணையில் குளிக்கும் மக்கள்.!! எச்சரித்து அனுப்பிய காவல் துறையினர்..
வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா மாநில எல்லையில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை கனமழையால் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.
வாணியம்பாடி, டிச.2- பெஞ்சால் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.
கன மழை காரணமாக தமிழக ஆந்திரா எல்லை, பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பணை அருகே உள்ள கனக நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்த பின்னர் ஆபத்தை உணராமல் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அந்த தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்து வரும் போதெல்லாம் அங்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் நீரில் மூழ்கி அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் தடுப்பணை நீரில் குளித்து கொண்டிருந்ததை பார்த்து போலீஸார் அவர்களை அழைத்து இங்கு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது. இங்கு யாரும் குளிக்க கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.
No comments