வெள்ளநீரை வெளியேற்ற கூடுதல் மின் மோட்டார்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு..
தூத்துக்குடி மாநகரில் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை கூடுதல் மின் மோட்டார் பயன்படுத்தி வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளநீர் சூழ்ந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநகராட்சிப் பகுதிகளான தனசேகரன்நகர், குறிஞ்சிநகர், ரஹமத்நகர், ராம்நகர், ஆதிபராசக்திநகர் மற்றும் மச்சாதுநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரஹமத்நகர் மற்றும் ஆதிபராசக்திநகர் பகுதியில் கூடுதலாக ஒரு மின் மோட்டார் வைத்து தண்ணீரை வெளியேற்றும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து நியூசுந்தர்நகர், ஈபி காலனி, ஏழுமலையான்நகர், கதிர்வேல்நகர், மில்லர்புரம், பி.எம்.சி.பள்ளி, முத்துகிருஷ்ணாநகர், எஸ்.பி.எம்.காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் மேயர் ஆய்வு மேற்கொண்டார்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments