பெட்ரோல்,டீசல் விலையை திரும்ப பெற வலியுறுத்தி ஏஐடியூசி ஆட்டோ சங்கம் சார்பில் ஆட்டோக்களுக்கு மலர் வளையும் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் பெட்ரோல்,டீசல் விலையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் எல்லைப் பிள்ளை சாவடி அரசு குழந்தைகள் மருத்துவமனை எதிரே நடைபெற்றது.
மாநில செயலாளர் சேது செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு மலர் வளையம் வைத்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ கட்டண செயலியை செயல்படுத்த வேண்டும், உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments