Breaking News

கனமழையினால் வீடு இடிந்து சேதம் அதிமுக சார்பில் நிவாரணம்..

 


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியம் காழியப்பநல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் ஓடக்கரை தெருவில் வசித்து வருபவர் ரத்தினகுமார் இவருக்கு சொந்தமான பழமையான மாடி வீடு ஒன்று உள்ளது இதில் பின்புறம் இவர்கள் நேற்று உறங்கிய நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர் இந்நிலையில் வீட்டில் இருந்த நான்கு ஆடுகள் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது இந்நிலையில் சம்பவத்தை அறிந்த அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பவுன்ராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறியதோடு ரொக்க பணம். ஆடைகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நிவாரணமாக வழங்கினார் அப்பொழுது அதிமுக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் வி ஜி கண்ணன் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி துணை தலைவரும் வார்டு உறுப்பினருமான சுப்பிரமணியன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!