சீர்காழியில் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அதிமுக சார்பில் அனுசரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சீர்காழி ஈசானியத்தெருவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரதி,முன்னாள் எம்.எல்.ஏ ம.சக்தி, ஒன்றிய செயலாளர்கள் ஏ.கே.சந்திரசேகரன்,ரவிச்சந்திரன்,மாநில ஜெ.பேரவை துணை செயலாளர் இ.மார்கோனி முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற நிகழ்வில் நகர ஜெ.பேரவை செயலாளர் ஏ.வி.மணி, நிர்வாகிகள் பக்கரிசாமி, மலையப்பன், லெட்சுமி, இறைஎழில், அஞ்சம்மாள் பங்கேற்றனர்.சட்டநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் தெட்சிணாமூர்த்தி,உமையாள்பதி ரவி,ராஜசேகர்,மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூர் கழக செயலாளர் போகர்.ரவி தலைமையிலும், கொள்ளிடத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.நற்குணன் தலைமையிலும் எம்.ஜி.ஆர் நினைவு தினம் நடைபெற்றது. கொள்ளிடத்தில் நிர்வாகிகள் சிவக்குமார்,ஆனந்தநடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments