அதிமுக மற்றும் பாமகவினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி..
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் தி.மு.க. மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் தலைமையில் பிள்ளை பெருமாள் நல்லூர் ஊராட்சி, செட்டிமேடு பகுதியிலிருந்து அ.தி.மு.க. பா.ம.க. கட்சியில் இருந்து விலகி 50 க்கும் மேற்பட்டவர்கள் தி.மு.க.வில் இன்று இணைந்தனர். செம்பனார் கோவில் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் ஏற்பாட்டில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் வைத்தியநாதன், ஊராட்சி மன்ற தலைவர் தீபா முனுசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் திமுக மாவட்ட செயலாளர் பூம்புகார் தொகுதி எம்எல்ஏ நிவேதா முருகன் பேசும் போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதை பார்த்து அதிக அளவில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்து வருவதாகவும் அனைவருக்கும் உறுதுணையாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.
No comments