அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்..
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்கார சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் தமிழக அரசை கண்டித்தும், எவ்வித அரசியல் இடையூறும் இன்றி நீதி வழங்கிட சிபிஐ விசாரணை வேண்டியும் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட அதிமுகவினர் கலந்துகொண்டு தமிழக அரசை கண்டித்தும், மாணவி பாலியல் சம்பவத்திற்கு நீதி கோரியும், மொபைலில் பேசி யார் அந்த சார்? என கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத அரசின் நிலையால் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் வாய் திறக்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அன்பழகன், உடனடியாக வழக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் உடனடியாக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
பேட்டி: அன்பழகன், அதிமுக மாநில செயலாளர்.
No comments