தனியார் தொழிற்சாலையில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் திருடிய வாலிபர் கைது. இருவர் தலைமறைவு..
புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு புதுவை மற்றும் தமிழக பகுதிகளை சேர்ந்த ஆண்கள்,பெண்கள் என 500கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில்,கடந்த 17ஆம் தேதி ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் திருடு போனதாக, தொழிற்சாலை காவலர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (25),புஷ்பராஜ் மற்றும் கடலூரை சேர்ந்த பிரஷாந்த் ஆகியோ திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சத்தியமூர்த்தி கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 250 கிலோ காப்பர்களை பறிமுதல் செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
No comments