சேதராப்பட்டு மரத்தூள் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
புதுச்சேரி சேதராப்பட்டில் மரத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இன்று காலை இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான மரத்து மூட்டைகள் எரிந்தன. இந்த கண்ட ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க இரண்டு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயணைத்தனர்.ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.
இந்த தொழிற்சாலை அனுமதி பெறாமல் நடத்தப்படுவதாகவும் இதன் துகள்கள் பக்கத்தில் உள்ள கிராமங்களில் பரவி மக்கள் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதய நோய், மூச்சுத் திணறல் உட்பட பல நோய்கள் வருவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
No comments