Breaking News

புதுச்சேரி சட்டப்பேரவையில் அரியவகை வெளிநாட்டு பறவை ஒன்று தஞ்சம்..

 


புதுச்சேரியில் பறவைகளின் சரணாலயமாக உள்ள ஊசுட்டேரியில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான அரிய வகை பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் இறைகளை தேடியும் ஆண்டுதோறும் வருவது வழக்கம்,


அப்படி வெளிநாடுகளில் இருந்து வரும் சில பறவைகள் ஊசுட்டேரியிலே தங்கி விடுகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உசுட்டேரியில் இருந்து பறவைகளும் மீன்களும் வெளியேறியது. 


இதில் திசை மாறிய அரிய வகை பறவையான நீர்க்காகம் இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் தஞ்சம் அடைந்தது

இதனை அறிந்த சட்டசபை காவலர்கள் அந்த பறவையை லாவகமாக பிடித்து வனத்துறை ஊழியருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சட்டப்பேரவை வந்த வனத்துறை ஊழியரிடம் அந்த அறிய வகை பறவை ஒப்படைக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!