புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு மண் கடத்திச் சென்ற லாரி பறிமுதல். ஓட்டுநர் தப்பி ஓட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து சவுடு மண் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிக்கு கடத்திச் செல்லப்படுவதாக தொடர் புகார்கள் வந்தது. இதனையடுத்து மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் திருக்கடையூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மண் ஏற்றி வந்த லாரியை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ய முயன்ற போது லாரியை சற்று தொலைவிலேயே நிறுத்திவிட்டு லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார். இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து பொரையாறு காவல் நிலையத்தில் கனிமவளத் துறை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பொறையார் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் வாணகிரி பகுதியில் இருந்து அனுமதியின்றி மண் ஏற்றி வந்த லாரி மேல வானகியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொறையாறு போலிசார் தப்பி ஓடிய ஓட்டுநரை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments