காழ்ப்புணர்ச்சி காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம்.? அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. சபாநாயகர் செல்வம்..
சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சுயேட்சை எம்எல்ஏ சட்டப்பேரவை செயலர் தயாளனிடம் இன்று கடிதம் அளித்தார்.
இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த சபாநாயகர் செல்வம்,
பொது கணக்கு குழுவில் இருந்து நேரு எம்எல்ஏ நீக்கப்பட்டதால் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி கடிதம் கொடுத்துள்ளார், அவரை நான் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று சபாநாயகர் செல்வம் கடுமையாக விமர்சித்தார்.
சட்ட விதிகளுக்கு உட்பட்டே அரசு விழாக்கள் மற்றும் தனிப்பட்ட விழாக்களில் கலந்து கொள்வதாக தெரிவித்த சபாநாயகர் செல்வம்,முதல்வர் அழைப்பதாலேயே தான் அவரது அலுவலகம் செல்வதாகவும் தற்போது கூட அழைப்பு வந்தது என்றும் தனது கைபேசி எடுத்து காட்டி விளக்கம் அளித்தார்.
மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து சட்டப்பேரவை கூடும் போது பேரவை முன் வைக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்று தெரிவித்த அவர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
நேரு எம்எல்ஏ மனு கொடுத்தது அவரது உரிமை என்றும்,அதை அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் விவாதத்துக்கு வைக்கப்படும் என்றார்.தனக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்று சேரட்டும் பார்க்கலாம் என சபாநாயகர் செல்வம் சவால் விடுத்துள்ளார்.
No comments