டெல்லி முதல் தனுஷ்கோடி வரை பயணம் மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளி குழு புதுச்சேரி வந்த நிலையில் சத்யா சிறப்பு பள்ளி சார்பில் வரவேற்பு.
புதுடெல்லியை சார்ந்த சங்கதி பவுன்டேஷன் மூலம் 10 மாற்றுத்திறனாளிகள் குழுவாக இணைந்து டெல்லி முதல் தனுஷ்கோடி வரை செல்லும் ஒரு "சங்கதி யாத்திரை" நடத்துகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகளால் இயக்கப்படும் மாற்றியமைக்கப்பட்ட வாகனத்தில் 6000 கிலோ மீட்டர் பயணத்தை, 20 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷாவால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக புதுச்சேரி சமூகநலத்துறை இயக்குனர் ராகினி மற்றும் உணவு பிரிவு காவல் கண்காணிப்பாளர் மாறன் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.
இந்த குழு 2024 டிசம்பர் 26ஆம் தேதி இரவில் புதுச்சேரியை வந்தடைந்தது. மற்றும் 27ஆம் தேதி திருப்பதி நோக்கி புறப்பட உள்ளது. இந்த பயணம் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகுதல், உள்ளடக்குதல், இயங்குதல், மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேவைகள் போன்ற முக்கிய அம்சங்களைப் தெளிவு படுத்தும்.
அதே சமயத்தில், அவர்கள் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, விளையாட்டு மற்றும் வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
இத்தகைய ஒரு மாபெரும் முயற்சியை சிந்திக்க மட்டுமல்லாது சமூக மாற்றத்தையும் உருவாக்கும்.இது உண்மையிலேயே அனைவருக்கும் மாபெரும் ஊக்கமாக அமைய உள்ளது!
No comments