அரசு பள்ளி மாணவர்களுக்கு குடைகள் வழங்கிய விவசாயி..!!மாணவர்கள் மகிழ்ச்சி. பெற்றோர்கள் பாராட்டு,..
மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி அருகே அகர வட்டாரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன், முற்போக்கு இயற்கை விவசாயியான இவர் அகரவட்டாரம் பகுதியில் தனக்கு சொந்தமான நிலங்களில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் தான் கல்வி பயின்ற நல்லநாயகபுரம் பள்ளி மற்றும்
தொடுவாய், மாதானம், எருக்கூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தடையின்றி பள்ளிகளுக்கு சென்று கல்வி பயில ஏதுவாக குடைகள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் நேற்று
நல்லநாயகபுரம் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் பயிலும் சுமார் 50 மாணவர்களுக்கு குடைகளை விவசாயி வரதராஜன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தொடுவாய் கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கும், மாதானம், எருக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கும் குடைகளை வழங்கினார் இதில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், நாராயணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments