உறை கிணற்றில் தவறி விழுந்த மாடு: தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்!
தூத்துக்குடியில் உறைகிணற்றில் தவறி விழுந்த மாட்டினை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
தூத்துக்குடி ஜெய்லானி காலனியில் உள்ள ஒரு உறை கிணற்றில் மாடு ஒன்று தவறி விழுந்ததாக தூத்துக்குடி தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை உதவி மாவட்ட அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு உறை கிணற்றில் விழுந்து மேலே எழும்ப முடியாமல் தவித்த மாட்டினை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி லாவகமாக உயிருடன் மீட்டனர்.
செ. அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments