Breaking News

வைத்தீஸ்வரன் கோவிலில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில் எடக்குடி வடபாதி ஊராட்சியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 545 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 70 இலட்சத்து 9 ஆயிரத்து 429 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த விழாவில் வருவாய்துறை சார்பில் 257 பயனாளிகளுக்கு ரூ.89 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நத்தம் வீட்டுமனைப்பட்டாவும், இணையவழிப்பட்டாவும் மற்றும் சான்றிதழ்களும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைகளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட 6 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான வீட்டுமனைப்பட்டாவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை சார்பில் மனம் திருந்திய 1 நபருக்கு மறுவாழ்வு நிதி மூலம் ரூ.50,000ஃ- க்கான ஆணையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் திருமண உதவித்தொகையாக 45 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பிலான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரண உதவித்தொகைக்கான ஆணையும், மகளிர் திட்டத்தின் சார்பில் 66 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 10 இலட்சம் மதிப்பிலான சுய தொழில் கடனுதவிகளையும்;, மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக 14 பயனாளிகளுக்கு ரூ.56 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான சுய தொழிலுக்கான வாகனங்களும்;, தோட்டக்கலை துறையின் சார்பில் 6 நபர்களுக்கு ரூ.1 இலட்சத்து 9 ஆயிரத்து 320 மதிப்பிலான நடமாடும் காய்கறி வாகனம் மற்றும் தென்னங்கன்று, பழங்கன்றுகளும்;, வேளாண்மைதுறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.45 ஆயிரத்து 750 மதிப்பிலான பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் இடுபொருட்களும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 55 பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சத்து 59 ஆயிரத்து 574 மதிப்பிலான வங்கி கடனுதவிகளையும்;, தாட்கோ சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சத்து 41 ஆயிரத்து 785 மதிப்பிலான வாகன கடனுதவிகளையும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.31 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடு கடனுதவியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகளை சேர்ந்த 50 தூய்மை பணியாளர்களுக்கு ரூ.9 இலட்சம் மதிப்பிலான சீருடை மற்றும் பாதுகாப்பு கவசங்களும்; ஆக மொத்தம் 545 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 70 இலட்சத்து 9 ஆயிரத்து 429 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் , மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி ஆகியோர் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் தயாள விநாய அமல்ராஜ், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் விஜயேஸ்வரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், ஒன்றியக்குழு உறுப்பினர் தென்னரசு, எடக்குடி வடபாதி ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி.அஞ்சம்மாள், வட்டாட்சியர் அருள்ஜோதி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!