பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ஜாதி சான்றிதழ்.
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து நரிக்குறவர் பழங்குடியினர் பகுதி மக்களுக்கு பல ஆண்டுகளாக ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில் அமைச்சர் திருமுருகனின் பெரும் முயற்சியால் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அமைச்சர் திருமுருகன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட தாசில்தார் செல்லமுத்து மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
No comments