பாதூர் கிராமத்துக்கு செல்லும் சாலையில் முற்றிலுமாக சார்ந்த 200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம்..
தமிழகத்தையே உலுக்கி வரும் ஃபெஞ்சல் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை கடுமையான சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது இதன் காரணமாக உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் கிராமத்தைச் சார்ந்த ராமு என்பவரின் சொந்தமான வீட்டில் அருகே சாலையில் இருந்த மிகவும் பழமையான புளியமரம் ஒன்று கடுமையான காற்று வீசியதின் காரணமாக முற்றிலுமாக முறிந்து வீட்டில் காம்பவுண்ட் சுவரில் மற்றும் மின்சார கம்பின் மீது இருந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது வீட்டில் மேற்கூரை மற்றும் கட்டிடம் முழுவதும் சேதம் ஏற்படும் உள்ளதாக எனவே தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு இதுவரைக்கும் யாரும் வரவில்லை என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் வீட்டின் உரிமையாளர் ராமு என்பவர் ஹோட்டலில் வேலை பார்க்கும் நபர்கள் தங்க வைத்திருக்கிறார் அவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிலேயே இருப்பதால்
பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments