தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு தினம்..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் இன்று தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், மாநில அவை தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலையில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.மேலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments