அண்ணன் தம்பியிடம் சுமார் 24 லட்சம் மதிப்புள்ள 41.5 சவரன் தங்க 80,000 ரொக்க பணம் இரண்டரை கிலோ வெள்ளி நகைகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி பிரதீப் தலைமையில் இன்ஸ்பெக்டர் வீரமணி உள்ளிட்ட போலீசார் கொண்ட இரண்டு தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபாகரன் பன்னீர்செல்வம் மற்றும் குமரேசன் மற்றும் போலீசார் எலவனாசூர்கோட்டை அருகே உள்ள வட குரும்பூர் சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்களை போலீசார் மரித்து சோதனை செய்ய முயன்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட நினைத்து வாகனங்களை திருப்பினார்கள் அப்போது போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் 25 மற்றும் விக்னேஷ் 24 என்பது தெரிய வந்தது மேலும் அவர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடத்தில் நடத்திய விசாரணையில் விஜய் விக்னேஷ் இருவரும் ஒன்று சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக எலவனாசூர்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பதினோரு இடங்களிலும் திருக்கோவிலூர் சுற்றுவட்டாரத்தில் மூன்று இடங்களிலும் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் இவர்களின் திருட்டு சம்பவத்திற்கு அவர்களது தாயார் வீரம்மா 55 என்பவரும் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து போலீசார் விஜய் விக்னேஷ் மற்றும் திருட்டுக்கு உடந்தையாக இருந்த அவர்களது தாயார் வீரம்மா ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 41.5 சவரன் தங்க நகை 80 ஆயிரம் ரொக்கப்பணம் இரண்டரை கிலோ வெள்ளி நகைகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக விசாரணை செய்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி வெகுவாக பாராட்டினார்.
No comments