Breaking News

மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 62 வாகனங்கள் ரூ.10,08,546-க்கு ஏலம்:-

 


மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் மயிலாடுதுறை, சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட மதுவிலக்கு தொடர்பான குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 63 இரண்டு சக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்களை ஏலம்விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்; ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, மயிலாடுதுறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஏலத்தில், தஞ்சாவூர் அரசுப்பணிமனை தானியங்கி பொறியாளரால் அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, காவல்துறை மற்றும் கலால்துறை அதிகாரிகள் முன்னிலையில்; ஏலம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் 161 பேர் கலந்துகொண்டு, ஏலத்திற்கு கொண்டுவரப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்களில் 3 வாகனங்களை ரூ..2,05,910 மற்றும் 63 இரண்டு சக்கரவாகனங்களில் 59 வாகனங்களை ரூ.8,02,636 என மொத்தம்; 62 வாகனங்களை ரூ.10,08,546-க்கு ஏலம் எடுத்தனர். இந்த தொகையை அரசு கணக்கில் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

No comments

Copying is disabled on this page!