கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சொகுசு காரில் சென்று பல்வேறு வீடுகளின் பூட்டை உடைத்து திருடி உற்சாகமாக வலம் வந்த 6 பேரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொடர்ந்து இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு உளுந்தூர்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது சனிக்கிழமை அதிகாலை உளுந்தூர்பேட்டை விருத்தாசலம் சாலை மேம்பாலம் பகுதியில் நின்று கொண்டிருந்த விலை உயர்ந்த சொகுசு காரை ஆய்வு செய்த பொழுது அதில் மூன்று பேர் மது அருந்திய நிலையில் இருந்தனர்.
அவர்களை போலீசார் விசாரித்த பொழுது மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் ஆய்வு செய்த பொழுது அதில் பூட்டை உடைக்க பயன்படுத்தும் இரும்பு ராடு மற்றும் இரும்பு கம்பிகள் இருந்தது தெரியவந்தது இதையடுத்து பிடிபட்ட மூன்று பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர் அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் ஒரே காரில் வந்ததும் அதில் மூன்று பேர் அந்த பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றதாக கூறினர் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்தப் பகுதியில் சென்று பார்த்த பொழுது உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை மூன்று பேர் உடைத்து வீட்டில் இருந்த வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து வந்த பொழுது மூன்று பேரும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
மேலும் அவர்களிடம் விசாரித்த பொழுது கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ஆறு பேர் காரில் வந்ததாகவும் மூன்று பேர் அந்த சொகுசு காரில் இருந்ததாகவும் மூன்று நபர்கள் வீடு புகுந்து கொள்ளையடிக்க வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து ஆறு பேரையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்திய நிலையில் உளுந்தூர்பேட்டை அன்னை தெரசா நகர் பகுதியில் வசித்து வந்த டெல்லி உச்சநீதிமன்ற ஊழியர் சந்திரசேகர் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து மூன்று பேர் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்ததும் மூன்று நபர்கள் சொகுசு காரில் இருந்தபடி கண்காணித்து வந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் பண்ருட்டி அருகே உள்ள நடுவீரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாய்குமார் என்ற இளைஞர் அவரது நண்பர் சதீஷ் என்பவரின் சொகுசு காரை திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு செல்வதாக கூறி எடுத்துச் சென்றதாகவும் சாய் குமார் தனது நண்பர்களான ரவிச்சந்திரன் மதியழகன் பாலசுப்பிரமணியன் ஆகிய நான்கு அவர்களோடு இரண்டு சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு திருவண்ணாமலையில் கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் திருவண்ணாமலை செல்லாமல் பாதி வழியில் திரும்ப வந்து உளுந்தூர்பேட்டையில் காரை நிறுத்தி வீடு புகுந்து கொள்ளையடித்ததாகவும் தெரிவித்தார் இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சாய்குமார் ரவிச்சந்திரன் உட்பட 6 பேர் மீது பண்ருட்டி நெய்வேலி வடலூர் சிதம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளையடித்தல், கஞ்சா கடத்தல் உட்பட பல வழக்குகள் இருந்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து சாய்குமார் ரவிச்சந்திரன் மதியழகன் பாலசுப்பிரமணியன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்ததாக வழக்கு பதிவு செய்ததோடு ஆறு பேரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் மேலும் அவர்கள் கொள்ளையடித்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு ராடு மற்றும் இரும்பு கம்பி சொகுசு கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments