5 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 11.90 லட்சம் ரூபாயை இழந்தனர்.
காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் சுந்தர். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், வீட்டில் இருந்தே ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.அதை நம்பி விக்னேஷ் சுந்தர், 6 லட்சத்து 66 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், கிறிஸ்துமஸ் கிப்ட் வந்துள்ளது. அதை ஒப்படைக்க பணம் செலுத்த வேண்டுமென கூறினார். அதைநம்பி அவர், 4 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தி ஏமாந்தார்.
கரிக்கலாம்பாக்கம் ஆனந்தவேலு 27 ஆயிரத்து 500, புதுச்சேரியை சேர்ந்த நிதீஷ் 6 ஆயிரத்து 300, சண்முகாபும் சிவகாமி 4 ஆயிரம் என, மொத்தம் 5 பேர் 11 லட்சத்து 91 ஆயிரத்து 800 ரூபாய் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments