20ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்..
20ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு திருமுல்லைவாசல், பழையார், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுனாமியால் உயிர்நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீனவப் பெண்கள் திருமுல்லைவாசல் கடை தெருவில் இருந்து கருப்பு பேட்ச் அணிந்து ஊர்வலமாக சென்றனர். திருமுல்லைவாசல் கடற்கரையோரம் வைக்கப்பட்டுள்ள நினைவுத்தூண் வரை பேரணியாக சென்ற மீனவர்கள் அங்கு சுனாமியால் உயிர்நீத்தவர்கள் நினைவாக வைக்கப்பட்டிருந்த செங்கற்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
No comments