உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: விளாத்திகுளத்தில் நடைபெறுகிறது!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு அரசு அறிவிப்பின்படி, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான அரசு அலுவலர்கள் விளாத்திகுளம் தாலுகாவில் இன்று (புதன்கிழமை) தங்கி முகாமிட்டு, களஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளனர். இன்று மதியம் 2.30 முதல் 4.30 மணி வரை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி, பின்னர் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறியப்படும். அதன்பின்னர், விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாலை 4.30 மணிமுதல் மாலை 6 மணி வரை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
மீண்டும் நகர்ப்புறம், கிராம ஊராட்சிகள் பகுதிகளுக்குச் சென்று பல்வேறு அரசு துறைகளின் சேவை வழங்குதல், திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து இரவு அந்த பகுதியிலேயே தங்கி, நாளை (வியாழக்கிழமை) அதிகாலை அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரம், தூய்மை, போக்குவரத்து, முதல்வரின் காலை உணவுத் திட்டம் போன்றவை ஆய்வு செய்யப்படும். இந்த முகாமின்போது பொதுமக்கள், தங்கள் வாழ்விட முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும், கோரிக்கை மனுகளையும் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
No comments