குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீராங்கனைக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து!
மாவட்ட மற்றும் மாநில அளவில் குண்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை பெரியத்தாயிக்கு அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் ஒன்றியம், ஆயாள்பட்டி மகாவிஷ்ணுநகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீராங்கனை பெரியத்தாய். இவர் மாவட்ட அளவிலான குண்டு எறிதல் போட்டியில் முதலிடத்தையும், மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் 2 ஆம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றார். இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இல்லத்திற்கு வந்த பெரியத்தாயை அமைச்சர் கீதாஜீவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
No comments