மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்த சிஎன்ஜி கேஸ்சில் இயங்கும் ஆட்டோ திடீரென்று எரிந்து சேதம்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையில் சென்று கொண்டிருந்த சி.என் ஜி கேஸ்சில் இயங்கும் ஆட்டோ ஒன்று திடீரென்று தீ விபத்திற்கு உள்ளானது. அரசு மருத்துவமனை, துவக்கப்பள்ளி உள்ள சாலையில் பொதுமக்கள் மாணவர்கள் சென்ற நிலையில் ஆட்டோ கொளுந்து விட்டு எரிந்து முற்றிலும் ஊருக்குலைந்தது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எலந்தங்குடியில் இருந்து மருத்துவமனைக்கு ஆட்டோவில் வந்த பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி வரும்போது ஆட்டோவில் இருந்து ஸ்பார்க் ஆகி வெடித்ததாகவும் ஆட்டோ டிரைவர் கீழே இறங்கி ஓடிய நிலையில் ஆட்டோ தீப்பிடித்து உருக்குலைந்ததாகவும் அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிஎன்ஜி கேஸ்சில் இயங்கும் ஆட்டோ திடீர் என்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஆட்டோ ஓட்டுநர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments