Breaking News

ராவ் பகதூர் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை..

 


தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி மாநகர் மக்களின் தாகம் தீர்க்க தனது சொந்த செலவில் வல்லநாடு பகுதியில் இருந்து கொண்டு வந்த அப்போதைய நகர்மன்ற தலைவர் ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்தின் 155 ஆவது பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாநில மீனவரணி துணைத் தலைவர் எரோமியாஸ், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சரவணபெருமாள், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து மண்டல இணைச் செயலாளர் லெட்சுமணன், மகளிர் அணி நிர்வாகிகள் அந்தோணி கிரேசி, இந்திரா, மெஜூலா, சாந்தி, இராஜேஸ்வரி, தமிழரசி மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா, யுவன்பாலா, ஷியாம், உதயா உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!