Breaking News

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

 


புதுச்சேரியில் கடந்த 2021-ஆம் ஆண்டு உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பிரியதர்ஷினி நகரை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி அந்தோணி(60) மீது ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். 

இதையடுத்து போலிசார்,அந்தோணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று இறுதி விசாரணைக்கு வந்த நிலையில்,குற்றவாளி அந்தோணிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும்,ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க புதுவை அரசுக்கு உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.

No comments

Copying is disabled on this page!