Breaking News

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை.

தூத்துக்குடி சட்டபேரவை தொகுதி பாக முகவர்கள் கூட்டம் நாளையும் (வெள்ளிக்கிழமை), விளாத்திகுளம், கோவில்பட்டி தொகுதி பாக முகவர்கள் கூட்டம் வரும் 10ஆம் தேதியும் நடைபெறும் என வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 சட்டபேரவை தொகுதிகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், தூத்துக்குடி சட்டபேரவை தொகுதிக்கான பாக முகவர்கள் கூட்டம், எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளரும், தொகுதி பார்வையாளருமான இன்பா ரகு தலைமையில் நடைபெறுகிறது.

விளாத்திகுளம் சட்டபேரவை தொகுதிக்கான பாக முகவர்கள் கூட்டம் அங்குள்ள ஜி.வி.மஹாலில் வரும் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாநில நெசவாளர் அணி அமைப்பாளரும், தொகுதி பொறுப்பாளருமான பெருமாள் தலைமையில் நடைபெறுகிறது. கோவில்பட்டி சட்டபேரவை தொகுதி பாக முகவர்கள் கூட்டம் அங்குள்ள சத்தியபாமா திருமண மண்டபத்தில் வரும் 10ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12 மணிக்கு மாநில விவசாய அணி துணை அமைப்பாளரும், தொகுதி பொறுப்பாளருமான கணேசன் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டங்களில்,  தமிழக துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தொடர் நிகழ்ச்சிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, 2026 ஆம் ஆண்டு சட்டபேரவை பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய பூத்கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இதில், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

No comments

Copying is disabled on this page!